நாம் பார்க்கும் பொருட்களின் பிம்பங்கள், விழித்திரை எனும் மெல்லிய திசுவில் சரியாகக் குவிந்தால் நம்மால் பொருட்களை சரியாகப் பார்க்க முடியும். Refractive errors எனும் பார்வை குறைபாடு உள்ள கண்களில் விழித்திரையில் ஒளி சரியாகக் குவியாது. இதனால் பொருட்கள் மங்கலாகத் தெரியும். இதனைத் தவிர்க்க, கண்ணாடி அல்லது காண்டாக்ட் லென்ஸ் அணிய வேண்டும். கண்ணாடியில் உள்ள லென்ஸ் வழியாக ஒளியானது விழித்திரையில் சரியாகக் குவியும். பொருட்களைத் தெளிவாகப் பார்க்க முடியும்.
குழந்தைகளுக்கு Refractive Error எனும் பார்வை குறைபாடு உண்டாகக் காரணங்கள்:
- கண் லென்ஸில் மாற்றம் ஏற்படுதல்
- கருவிழி வளைவு ஆரங்கள் மற்றும் மாற்றம் ஏற்படுதல்