அறிமுகம்:
தசைகள், கொழுப்பு மற்றும் பார்வை நரம்புகளால் கண்கள் சூழப்பட்டுள்ளன. தைராய்டு கண் நோய் ஏற்பட்டால் கொழுப்பின் அளவு அதிகரிக்கும்; தசைகள் தடிமனாகும். இதனால் கண்கள் முன்புறம் வெளிவரும். பார்வை நரம்பும் பாதிக்கப்படும். சிலருக்கு பார்வையிழப்பு, கருவிழியில் புண், கண் நீர் அழுத்தம், மாறுகண் போன்ற குறைபாடுகள் ஏற்படும்.
அபாயக் காரணிகள்:
தைராய்டு நோய் உள்ளவர்களுக்கு தைராய்டு கண் நோய் ஏற்படும். ஆனால், பிறருக்கும் ஏற்படும். பெண்களுக்கும், 40 வயதைக் கடந்தவர்களுக்கும் இந்த நோய் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது.
அறிகுறிகள்:
 • வறண்ட கண்கள்
 • வீங்கிய கண் இமைகள்
 • ஒட்டிக் கொள்ளும் கண்கள்
 • கண்களை மூட சிரமப்படுதல்
 • பார்வை மோசமடைதல்
 • இரட்டைப் பார்வை
 • கண்களை அசைப்பதில் சிரமம்
சிகிச்சை:
 • இந்தக் குறைபாடு, ஆரம்ப நிலையில் இருந்தால் கண்களை ஈரப்பதமாக வைத்துக்கொள்ள கண் மருத்துவர், சொட்டு மருந்துகளைப் பரிந்துரைப்பார்.
 • நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க, ஸ்டிராய்டு மருந்துகள் அளிக்கப்படும்.
 • நோய் தீவிரமடைந்திருந்தால், அறுவை சிகிச்சை செய்து கண்களை அகற்றும் நிலை ஏற்படலாம்.
கண் தசை அறுவை சிகிச்சை:
நீண்ட நாட்களுக்கு தைராய்டு கண் நோய் இருந்தால், கண்களை அசைப்பதில் மிகுந்த சிரமம் ஏற்படும். கண் தசை அறுவை சிகிச்சை செய்து கொண்டால் கண்கள் இயல்பாக செயல்படும். மாறுகண் தோன்றும் அபாயமும் தவிர்க்கப்படும்.
 கண் குழி அறுவை சிகிச்சை:
கண்களில் புடைப்பு அதிகமாக இருந்தால் பார்வை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. கண்களில் உள்ள குழியில் உள்ள எலும்பில் அறுவை சிகிச்சை செய்யப்படும். இதனால் கண்களுக்கு போதிய இடம் கிடைப்பதால் வெளியே நீட்டியிருக்கும் கண்கள் உள் செல்லும்.
கவனத்தில் கொள்ள வேண்டியவை:
 • தைராய்டு நோய்க்கான மருந்து, மாத்திரைகளை எக்காரணம் கொண்டும் நிறுத்தக்கூடாது. தொடர்ந்து உட்கொள்ளவேண்டும்.
 • தைராய்டு அளவைத் தொடர்ந்து பரிசோதிக்க வேண்டும்.
 • தைராய்டு நோய் உள்ளவர்கள், சீரான இடைவெளியில் கண் மருத்துவரிடம் கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
சிகிச்சைகளால் ஏற்படும் பக்க விளைவுகள்:
 • ஸ்டீராய்டு மருந்துகள் பயன்படுத்துபவர்களில் சிலருக்கு வாயுத் தொல்லை (வயிற்று வலி), எடை அதிகரிப்பு மற்றும் முகம் வீக்கம் ஏற்படலாம். இரத்தத்தில் சர்க்கரை அளவு வேறுபடலாம். ஸ்டீராய்டு மருந்துகளால் சிக்கல் ஏற்படுபவர்களுக்கு குறைவான அளவுகளில் ஸ்டீராய்டு மருந்துகளை மருத்துவர் வழங்குவார்.
 • அறுவை சிகிச்சை செய்துகொள்பவர்களில் சிலருக்கு இரத்தக்கசிவு, நோய்த்தொற்று போன்ற பக்கவிளைவுகள் ஏற்படலாம். எனினும் மிக அரிதாகவே இந்த நிலை ஏற்படும். மிகப்பெரும்பான்மையாருக்கு அறுவை சிகிச்சை மிகவும் பாதுகாப்பாக உள்ளது.  நிரந்தரமாக கண் பாதிப்படைவதிலிருந்து தடுக்கிறது.
Back to English Version