அறிமுகம்:
தோல் புற்றுநோயில் ஒருவகை, கண் இமை தோலில் ஏற்படும். பொதுவாக, கீழ் இமையில் இது ஏற்படும். எனினும், மேல் இமை, கண்களில் ஓரங்கள், புருவங்கள் போன்றவற்றிலும் ஏற்படும்.அபாயக் காரணிகள்:
வயது மூப்பு, வெளிர் தோல் மற்றும் சூரிய ஒளியில் அதிக நேரம் இருத்தல்/பணிபுரிதல்அறிகுறிகள்:
- தோலில் வலியில்லாத கட்டிகள் உண்டாகுதல்
- வலி எற்படுத்தும் கட்டிகள், தோலில் ஏற்படுதல்
- இமைகளில் உள்ள முடி உதிர்தல்
- தோலில் புண் மற்றும் மச்சங்கள் ஏற்படுதல்
- தோலில் இரத்தம் வடிதல்
- தோல் இறுக்கமடைதல்
சிகிச்சை:
தோல் புற்றுநோய்க்கான சிகிச்சை, இரண்டு படிநிலைகளை உடையது. வெட்டியெடுத்தல் மற்றும் மறுசீரமைப்பு.-
வெட்டியெடுத்தல்:
கட்டிகளை மருத்துவர் வெட்டி, அகற்றுவார். கண்இமை தோல் புற்றுநோயில் முழு கண் இமையும் அகற்றப்படும். கட்டிகள், பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு புற்றுநோய் கட்டியா என்பது உறுதி செய்யப்படும். நோயின் தீவிரத்தைப் பொறுத்து உங்களுக்கு தேவைப்படும் சிகிச்சையை கண் மருத்துவர் பரிந்துரைப்பார்.
-
மறுசீரமைப்பு:
அகற்றப்பட்ட திசுக்களை மருத்துவர் மீண்டும் உருவாக்குவார். உங்கள் உடலில் உள்ள தோலிலிருந்து ஒரு பகுதி எடுத்து கண் இமைத் தோலை உருவாக்குவார். இயல்பான கண் இமை போலவே இதுவும் செயல்படத் தொடங்கும். இது கண்களையும் பார்வையையும் பாதுகாக்கும், முகத்திற்கு இயல்பான தோற்றத்தையும் அளிக்கும்.
அறுவை சிகிச்சைக்கு பிறகு சிறிய தழும்பு இருக்கும். புற்றுநோய் மீண்டும் தாக்காமல் இருப்பதை உறுதி செய்ய, முறையான பரிசோதனை அவசியம். கண் இமையைத் தாண்டி உடலில் புற்றுநோய் பரவியிருந்தால் புற்றுநோய்க்க்கான பிற சிகிச்சைகளை தவறாமல் தொடர வேண்டும்.
Back to English Version