அறிமுகம்:
இரண்டு கண்களில் ஒரு கண், பலவீனமாக இருந்தால், அதனை சோம்பேறிக் கண் என மருத்துவர்கள் குறிப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு மட்டுமே இந்த நிலை ஏற்படும். சோம்பேறி கண்ணானது பார்க்க
சாதாரணமாக இருந்தாலும் அதன் பார்வைத் திறன் குறைவாக இருக்கும்.
காரணங்கள்:
சோம்பேறிக் கண்ணிற்கும் மூளைக்குமான தொடர்பு மிகவும் பலவீனமாக இருக்கும். இதனால் இந்தக் கண்ணால் பார்க்கும் பொருட்கள் அனைத்தும் மிகக் குறைவான தரத்தில், தெளிவில்லாமல் இருக்கும். நாளடைவில் பொருட்களை மங்கலாகக் காட்டும் கண்ணை மூளை தவிர்க்கத் தொடங்கி விடும். எனவே, சோம்பேறிக் கண் மேலும் மோசமடையும்.
- மாறுகண்
- பார்வைத்திறனில் வித்தியாசம் ஏற்படுதல்
- அதிகளவில் கண் இமை தொங்கிய நிலையில் இருத்தல்
- கண்புரை
அபாயக் காரணிகள்:
சோம்பேறி கண்ணானது கண்ணின் வளர்ச்சியுடன் நேரடி தொடர்புடையது. எனவே, சிறு குழந்தைகளுக்கு, எட்டு வயதுக்கு குறைவாக இந்தக் குறைபாடு ஏற்பட்டால் அவர்களுக்கு பாதிப்பு அதிகமாக இருக்கும். இந்தக் குறைபாடு தோன்றுவதற்கு, வேறு சில காரணங்களும் உள்ளன.
- குறைமாதத்தில் பிறந்த குழந்தைகள்
- பிறக்கும்போது கண்ணின் அளவு சிறியதாக இருத்தல்
- குடும்பத்தில் யாருக்கேனும் சோம்பேறிக் கண் இருத்தல்
- குடும்பத்தில் யாரேனும் கண்ணாடி அணிந்திருத்தல்
- வளர்ச்சியில் தேக்கம் இருத்தல்
அறிகுறிகள்:
- ஒரு கண், உள்நோக்கியோ வெளிநோக்கியோ இருக்கும்.
- இரு கண்களும் இணைந்து செயல்படாது.
- கவனமாகப் பார்க்க, ஒரு கண்ணை மூடி, மற்றொரு கண்ணால் பார்க்க வேண்டிய நிலை
- கண் அசைவுகள், இயல்பற்று இருத்தல்
- தலையை சாய்த்தபடி பார்த்தல்
சிலருக்கு அறிகுறிகளைக் கண்டறிவதில் சிரமம் இருக்கும். எனவே, 2-5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை முறையான, விரிவான கண் பரிசோதனைக்கு உட்படுத்தவும். ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை எடுத்தால் இந்தக் குறைபாடு தீவிரமடைவதிலிருந்து தடுக்கலாம்.
சிகிச்சை:
சோம்பேறிக் கண்ணை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெறத் தொடங்கினால் விரைவில் குணப்படுத்தலாம். தங்களது சோம்பேறிக் கண் மூலமாக பார்ப்பதை குழந்தைகள் அதிகப்படுத்துவதே முதல் நடவடிக்கை. கூடுதலாக, மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது நன்றாக உள்ள கண்ணில் கட்டு (Patch) போடப்படும். இதனால் சோம்பேறிக் கண் மூலமாக மட்டுமே கட்டாயம் குழந்தைகள் பார்த்தாக வேண்டும். இதன் மூலம் அந்த கண்ணிற்கும் மூளைக்கும் இடையேயான தொடர்பு பலப்படும். இதனால் பார்வை மேம்படும்.
பேட்ச்சிங் பற்றிய விவரங்களுக்கு, இங்கே கிளிக் செய்யவும்
கண்ணாடி அணிவதை பற்றிய விவரங்களுக்கு, இங்கே கிளிக் செய்யவும்
Back to English Version