(ROP) என்றால் என்ன?
Retinopathy of Prematurity (ROP) என்பது குறைமாதத்தில் மற்றும் குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகளின் விழித்திரையில் ஏற்படும் இரத்த நாளங்களின் ஒழுங்கற்ற வளர்ச்சியே ஆகும். தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது, குழந்தையின் கண்ணில் இரத்த நாளங்களின் வளர்ச்சி நடுப்பகுதியிலிருந்து ஓரப்பகுதிகளை நோக்கி வளரும். குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு இரத்த வளர்ச்சி சீராக இருப்பதில்லை. இரத்த நாளங்களின் வளர்ச்சி ஒழுங்கற்ற முறையில் நடப்பதனால் குழந்தையின் விழித்திரையில் பாதிப்பு ஏற்படுவதற்கு ஏதுவாகிறது.