Paykwik

கொரோனா ஊரடங்கும் சேலம் அரவிந்தின் செயல்பாடுகளும்

எதிர்வரும் நாட்களுக்கு தயாராகுதல்

மத்திய அரசின் சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில் கொரோனா நோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மாவட்டங்களில் சென்னை, மதுரை, கோயம்புத்தூருக்கு அடுத்ததாக சேலமும் இடம்பெற்றிருந்தது. வழக்கமான பணி நாளில் சேலம் அரவிந்தில் கண் பரிசோதனை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை 550. ஊரடங்கு காரணமாக அவசர சிகிச்சைகள் மட்டும் வழங்கப்படுகின்றன. சராசரியாக தினமும் 50நோயாளிகள் மருத்துவமனைக்கு வருகின்றனர். நோயாளிகளை கவனமுடன் கையாள, சுழற்சி முறையில் பணியாளர்கள் மருத்துவமனையில் பணியமர்த்தப்படுகின்றனர்.

மே 4 முதல் இயல்பு நிலைக்கு திரும்பக்கூடும் என்பதால் அதிகரிக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையை எவ்வாறு கையாள்வது எனத் திட்டமிடத் தொடங்கினோம்.மருத்துவமனை அடித்தளத்தில்50 சதவீத நோயாளிகளைப் பரிசோதனை செய்வதால் நல்ல காற்றோட்டம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.தற்போது நம் மருத்துவமனைகளில் பின்பற்றப்படும் சமூக இடைவெளி நடைமுறைகளைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். நோயாளிகள், மருத்துவப் பணியாளர்கள் என அனைவரும் மிக கவனமாகப் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அரவிந்தின் மூத்த உறுப்பினர்களின் ஆதரவு மற்றும் திட்டமிடலுடன் நமது அன்றாட பணிகளான நோயாளிகளின் சேர்க்கை, மருத்துவ சேவைகள், அறுவை சிகிச்சைகள்,முகாம் செயல்பாடுகள் போன்றவற்றை திறம்பட நடத்திட வேண்டும்.இவை அனைத்தையும் நாம் நிச்சயம் சிறப்பாக செய்து முடிப்போம்.

மனோகர் பாபு மற்றும், சேலம் அரவிந்த் குழுவினர்

ஊரடங்கு காலத்தில் ஒரு பணிநாள்

கொரோனா வைரஸ் நோய் பரவுவதைத் தடுக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட நெறிமுறைகள் யாவும் நம் மருத்துவமனையில் மிக கவனமாகச் செயல்படுத்தப்பட்டு அவை முறையாக கண்காணிக்கப்படுகின்றன.  மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், சோப்பு மற்றும் தண்ணீரில் கை கழுவிய பின்னரேமருத்துவப் பரிசோதனைக்காக உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

நுழைவாயில் மற்றும் MRD பதிவு செய்யும் பகுதியில் நோயாளிகளின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுகிறது. இருமல், காய்ச்சல், மூச்சு விடுவதில் சிரமம், சமீபத்திய பயண விவரங்கள் போன்ற விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.மேலும், நோய்த் தொற்று அதிகம் உள்ள பகுதிகளிலிருந்து வருகிறார்களா என்பதும் கேட்கப்படுகிறது. இந்தப் பணிகளுக்கு இரண்டு செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். நோயாளிகளை அழைத்துச் செல்ல ஒரு செவிலியரும் பார்வைத் திறன் பரிசோதனை செய்ய ஒரு செவிலியரும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். நுழைவாயில் மற்றும் MRD பதிவு செய்யும் பகுதியிலேயே பார்வைத் திறன் பரிசோதனையும் மருத்துவப் பரிசோதனையும் செய்யப்படுகின்றன. ஒவ்வாமையால் கண்கள் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளைக் கையாள மூன்று செவிலியர்களும் இரண்டு மருத்துவர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு நோயாளியையும் பரிசோதித்த பிறகுபரிசோதனைக் கருவிகள், மேஜை, நோயாளி காத்திருக்கும் நாற்காலி என அனைத்தும் தூய்மைப்படுத்தப்படுகின்றன. இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை தரைப் பகுதி முழுவதும் சுத்தம் செய்யப்படுகின்றன.

யூனிட்1 இல்கண் ஒவ்வாமை இல்லாத நோயாளிகளுக்கு பரிசோதனை செய்யப்படுகின்றன. தினமும் இரண்டு மூத்த மருத்துவர்களும் நான்கு பயிற்சி மருத்துவர்களும் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். பொது நோயாளிகளைப் பயிற்சி மருத்துவர்கள் கையாளுகின்றனர். சிறப்புப் பிரிவுகளுக்கு பரிந்துரைக்கப்படும் நோயாளிகளை மூத்த மருத்துவர்கள் பரிசோதிக்கின்றனர். சிறப்புப் பிரிவு மருத்துவர்களைச் சந்திக்கும் தேவையுள்ள நோயாளிகளுக்கு முன்பதிவு வசதியை ஒருங்கிணைக்கும் பணிகளை ஆலோசகர்கள் மேற்கொண்டுள்ளனர்.

பணியில் உள்ள அனைத்து மருத்துவர்கள்/செவிலியர்கள்/துப்பரவுப் பணியாளர்கள் மற்றும் பாதுகாவலர்களுக்கு தேவையான பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கருவிழி கிழிதல், இரு கண்களிலும் புரை முற்றியதால் ஏற்பட்ட பார்வையிழப்பு என சிறப்புப் பிரிவுகளில் மிக அவசர அறுவை சிகிச்சைகள் மட்டுமே தினசரி செய்யப்படுகின்றன.

நவீன தொடர்பு முறைகள்

பெரும்பாலான மருத்துவமனை நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டதால் தொடர் கண்காணிப்பு தேவைப்படும் மறுபரிசோதனை நோயாளிகளுக்குதொழில்நுட்ப வசதிகள் மூலம் மருத்துவர்களை அணுகும் புதிய தொடர்பு முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அரவிந்த் இணையதளம் மூலம் காணொளி ஆலோசனை வழங்கப்படுகிறது.

காணொளி ஆலோசனை மற்றும் நோயாளிகளுக்கான முன் பதிவைத் ஊக்குவிப்பதற்காக மருத்துவமனையின் தொலைபேசி எண்ணுக்கு வரும் அழைப்புகளை ஆலோசகர்களுக்கு மாற்றி விடப்படுகின்றன. இதற்காக 3 ஆலோசகர்கள், சுழற்சி முறையில் பணியமர்த்தப்படுகின்றனர். நோயாளிகளின் மருத்துவ விவரங்களை EMR இல் பார்த்து, நோயாளிகளின் சந்தேகங்களுக்கு பதிலளித்தல், காணொளி ஆலோசனை பற்றி விளக்கிக் கூறுதல், முன்பதிவு வசதிகள் பற்றி கூறுதல், மிக அவசரம் எனில், தொலைபேசியில் அழைக்கும் நோயாளிகளை மருத்துவர்களுடன் தொலைபேசியில் பேச வைத்தல் போன்ற பணிகளை இந்த ஆலோசகர்கள் மேற்கொள்கின்றனர். இவை தவிர, காணொளி ஆலோசனைக்கான இணையதள இணைப்பானது (website link) குறுஞ்செய்தி மூலம் நோயாளிகளுக்கு அனுப்பப்படுகின்றன.

பிரத்யேக வாட்ஸ்அப் எண் மூலம் நோயாளிகளின் சந்தேகங்கள், மருத்துவர்களை வந்தடைகின்றன. வாட்ஸ்அப்பில் செய்திகள், படங்கள், குரல் செய்திகள் ஆகியவற்றின் மூலம் நோயாளிகள் எளிதாகத் தொடர்பு கொள்கின்றனர். கடந்த ஒரு மாதத்தில் கண் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களின் மொபைல் எண்களுக்கு ‘வாட்ஸ்அப் வசதி’ பற்றி குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. வாட்ஸ்அப் மற்றும் காணொளி ஆலோசனை பற்றி ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களிலும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. காணொளி ஆலோசனையைக் கையாள ஒரு மருத்துவரும் செவிலியரும் தினசரி பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். ஒரு நாளைக்கு சராசரியாக காணொளி மூலமாக 10 அழைப்புகளும் குறுஞ்செய்தி மூலம் 25 ஆடியோ அழைப்புகள்/படங்களும் வருகின்றன. மருத்துவமனைக்கு வரும் புதிய நோயாளிகளுக்கு காணொளி ஆலோசனை பற்றி விளக்கமாக எடுத்துரைக்க, சுழற்சி முறையில் மற்ற பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

RoP பரிசோதனை

ஊரடங்கு காலத்திலும் பிற மருத்துவமனைகளுடன் இணைந்து அரவிந்த் மேற்கொள்ளும்RoPபரிசோதனைகள், தடையின்றி தொடர்கிறது. குறைமாதத்தில் பிறந்த 26 புதிய குழந்தைகளுக்கும்மறு பரிசோதனை தேவைப்படும் 33 குழந்தைகளுக்கும்விழித்திரை பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இந்தக் குழந்தைகளுக்கு விழித்திரை ஊசிகள் செலுத்தப்பட்டன.

புதிய எண்ணங்கள் – புதிய செயல்பாடுகள்

பயன்படுத்தப்பட்ட முகக் கவசங்களைத் தூய்மைப்படுத்த, சுத்தப்படுத்தும் சாதனத்தைசேலம் குழுவினர்உருவாக்கியுள்ளனர். UV light decontaminator எனப்படும்புற ஊதா ஒளி மூலம் சுத்தப்படுத்தும் சாதனத்தைப் பழுதடைந்த ஃபிரிட்ஜில் உருவாக்கியுள்ளனர். பழைய பொருட்களை விற்கும் கடையிலிருந்து ஃபிரிட்ஜை வாங்கி, அதில் நோய்த்தொற்று ஏற்படாத வண்ணம் வேதியியல் முறைப்படி மிக கவனமாகச் சுத்தம் செய்து, ஃபிரிட்ஜில் புற ஊதாக் கதிர்களை வெளியிடும் டியூப் லைட்டுகள் பொருத்தப்பட்டன. கண்ணாடிகளை மாட்டும் கிளிப்புகளை ஆப்டிக்கலிலுருந்து பெற்று அதை ஃபிரிட்ஜில் பொருத்தி அவற்றில் முகமூடிகளையும் சுவாசக் கருவிகளையும் மாட்டி வைத்து தூய்மைப்படுத்துகின்றனர். ஃபிரிட்ஜ், லைட், பிற செலவுகள் என 1300 ரூபாய் செலவில்இந்த சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது.

செவிலியர் செயல்பாடுகள்

ஊரடங்கின் ஆரம்ப நாட்களில் 125 செவிலியர்களை கவனமாகப் பாதுகாப்பதும் அவர்களை ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் ஈடுபடுத்துவம் சவாலாகவே இருந்தது.

முதல் மற்றும் இரண்டாம் வருடசெவிலியர்களுக்கு அனைத்து பாடங்களும் மீண்டும் ஒருமுறைவிரைவாக விவரிக்கப்பட்டு, தேர்வு நடத்தப்பட்டன. முதல் வருட செவிலியர்களுக்கு திறன் மதிப்பீடு (skill assessment) நடத்தப்பட்டது. கொரோனா நோய் குறித்த விழிப்புணர்வு பயிற்சிகளும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. Dr.மனோகர் பாபு, தற்போதைய விவகாரங்கள் மற்றும் பொது அறிவு குறித்து செவிலியர்களுக்கு விளக்குகிறார்.

செவிலியர்கள், சமூக இடைவெளிமற்றும் பிற சுகாதார நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்றுகிறார்களா என்பதை உறுதிப்படுத்த போதுமான வழிகாட்டுதலும் கண்காணிப்பும் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன.செவிலியர்களுக்கு சத்தான உணவு வழங்க கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.

செவிலியர்களின் தினம், காலை 6 மணிக்குத் தொடங்குகிறது. காலை வேளைகளில் தலா ஒரு மணிநேரம் தியானம் மற்றும் உடற்பயிற்சிகள். பிறகு பயிற்சியாளர்களுக்கு படிப்பு நேரம். பணியாளர்களுக்கு பணி நேரம். மாலை 4.00 மணி முதல் பந்து விளையாட்டு (Throw ball), கைப்பந்து, கோ-கோ மற்றும் சிலபாரம்பரிய விளையாட்டுகளை செவிலியர்கள் விளையாடுகின்றனர். ஆரோஉத்சவ் போன்றே 5 அணிகளாகப் பிரிக்கப்பட்டு இந்த விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. வெற்றி பெறும் அணிகளுக்கு விரைவில் பரிசுகள் அளிக்கும் திட்டமும் உள்ளது.மாலை 7.00 மணிக்கு இரவு உணவு வழங்கப்படுகிறது. இரவு 9.30 மணி வரை தொலைக்காட்சி திரையிடப்படுகிறது. தொலைக்காட்சி பார்க்கும்போதும் சமூக இடைவேளிகவனமாகக் கடைபிடிக்கப்படுகிறது.

Click to read other newsletters