Paykwik

எந்த சவாலாலும் நம்மை மூழ்கடிக்க முடியாது...

அதிநவீன அறிவியல் சாதனங்கள் மற்றும்தொழில்நுட்பங்கள் இருந்தபோதிலும், மனிதமனதின் உள்ளுணர்வானது சவால்கள் அனைத்தையும் எதிர்கொள்ள முற்றிலும் தயாராகவில்லை.–Dr. V

நம் அனைவரின் ஆரோக்கியத்தையும் கேள்விக்குறியாக்கும் ஆட்கொல்லி வைரஸ்க்கு எதிராக ஒரு குடும்பமாக நாம் ஒன்று திரண்டுள்ளோம். அனைவரது வாழ்வும் பின்னோக்கி இழுக்கப்பட்டுள்ளது போன்ற உணர்வும் நிலையும் உருவாகியுள்ளன. சுறுசுறுப்புடன் இயங்கிய நம்மிடம் ஒரு சிறு சுணுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ்க்கு எதிராக நேரடியாகப் பணிபுரியும் அனைவருக்கும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம், மேலும் நம் நிறுவனத்தின் நோக்கத்துடன் ஒத்திசைந்து நம்மால் முடிந்த உதவியைச் செய்ய நாம் தற்போது தூண்டப்படுகிறோம். பணக்காரர், ஏழை என பாகுபாடில்லாமால் பலரையும் கொடிய நோயின் கோர நாக்கு, தொடர்ந்து பலி கேட்ட வண்ணம் உள்ளது. இருப்பினும், சில நேர்மறையான மாற்றங்களும் விளைந்துள்ளன. மக்களின் வாழ்வியல் முறைகளும் தேவையைக் குறைத்துக் கொள்ளும் மினிமலிசம் எனும் கோட்பாடும் தற்போது மேலோங்கி வருகின்றன. தங்களது சொந்த செலவுகளுக்காக தாராளமாக செலவு செய்து வந்த மக்கள், நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நன்கொடைகளையும் உதவிகளையும் செய்து வருகின்றனர்.

ஆனால், ஒரு வேளை உணவுக்காக அரும்பாடுபடும் எளிய மக்களைப் பார்த்தபோது, நிறுவனம் எனும் வகையில் நாம் அவர்களைவிட ஓரளவுக்கு பாக்கியவான்கள் என்பதை உணர்ந்தோம்.

 – மதுரை குழுவினர்

ஊரடங்கு காலத்தில் மிகக் குறைவான எண்ணிக்கை பணியாளர்களைக் கொண்டே மருத்துவமனை இயங்கியது.  இருப்பினும், துன்பங்களை தனது தோளில் நம் நிறுவனம் ஏந்திக்கொண்டது. தவிர்க்க முடியாத காரணங்கள் அன்றி, எதற்காகவும் எந்த ஒரு பணியாளரையும் பணிநீக்கம் செய்யக் கூடாது என்று முடிவு செய்யப்பட்டது.

கொரோனா நோயைப் பற்றி ஓரளவே தெரிந்திருந்தாலும் நோய் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்தும் நிலவும் சூழல் குறித்தும் பாதுகாப்பு வழிமுறைகள், நெறிமுறைகள் குறித்தும் விரிவாக அலசி ஆராயப்பட்டன. அவசரநிலையை எதிர்கொள்ள தயாரானோம். மூத்த நிர்வாகிகள் மற்றும் அரவிந்தின் அனைத்து கிளைகளிலும் உள்ள மூத்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களைக் கொண்டு செயல்திட்டம் வகுக்கப்பட்டது. புதுமையான சாதனங்களும் வழிமுறைகளும் கண்டறியப்பட்டன. அவை அனைத்தும் மற்ற கிளைகளுக்கும் பகிரப்பட்டன. அரசின் நெறிமுறைகளும் வழிமுறைகளும் நோயின் தீவிரத்தைப் பொறுத்து மாற்றியமைக்கப்பட்டன.

கண் மருத்துவத் துறையில் பின்பற்றப்பட வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் பற்றி தேசிய அளவில் வழிமுறைகள் வகுக்கும் குழுக்களில் நம் மூத்த நிர்வாகிகள் இடம்பெற்றிருந்தனர்.

அடுத்த தலைமுறை நிர்வாகிகளுக்கு மூத்த நிர்வாகிகள் வழிவிட்டு, ‘கொரோனா கால சிறப்புக் குழு’ சிறப்பாக செயல்பட ஆலோசனைகளை வழங்கினர்.

வழக்கமான பணிகளை மறுசீரமைத்தல், புதிய அமைப்பு முறைகளை இயங்க வைத்தல் ஆகியவை கடினமானவையாக இருந்தன. இருப்பினும், மேலாளர்கள் அவற்றைத் திறம்பட எதிர்கொண்டு சுமுகமான, மிகக் குறைவான சிக்கல்கள் கொண்ட பணிச்சூழலை உருவாக்கினர்.

ஒவ்வொரு பணியாளரும் பொறுப்புகளைப் பகிர்ந்துகொண்டனர்  .பிற துறைகள் செயல்படும் விதம் குறித்து பயிற்சி பெற்றனர். தற்போதைய சூழலை எதிர்கொள்ள, பல வேலைகளை செய்ய வேண்டிய தேவையும் உள்ளது.

மருத்துவமனைக்குள் நுழையும் நோயாளிகள் அனைவரையும் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற செய்து, ஒப்புதல் படிவத்தை நிரப்பவும் சீட்டு பதிவதற்கும் முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் உதவுகின்றனர்.

பாதுகாப்பு பணியாளர்கள், பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதுடன் நோயாளிகளை கண்ணியத்துடன் வழிநடத்துகின்றனர்.

பொது போக்குவரத்து இயக்கப்படாததால் பணியாளர்களை வாகனங்களில் அழைத்துச் செல்வதற்கு ஓட்டுநர்களை சுழற்சி முறையில் ஈடுபடுத்தி, முறைப்படுத்தும் பணிகளை போக்குவரத்துத் துறை மேற்கொண்டது.

பணியாளர்கள் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பிற்காக மருத்துவமனையின் உள்கட்டமைப்பு பணிகள் மேம்படுத்தப்பட்டன.

நோயாளிகளின் வரத்து குறைவாக உள்ளதால் முதுகலை மருத்துவர்களும் மருத்துவ அதிகாரிகளும் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டு, நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். தினமும் அழுத்தும் பணிச்சூழல் இல்லாததால் பாதுகாப்பான சூழலை அவர்கள் உணர்வதுடன் நாளின் பெரும்பகுதியை தங்கள் அன்பிற்குரியவர்களுடன் செலவிட முடிந்தது. நோயாளிகளின் அருகில் சென்று பரிசோதனை செய்யும் தேவையிருப்பதால் நோய்த் தொற்று பரவும் அபாயம் இருந்தாலும் எந்த மருத்துவரும் தன் கடமையிலிருந்து தவறவே இல்லை. கட்டணப் பிரிவிற்கோ இலவச மருத்துவமனைக்கோ அவசர கண் சிகிச்சைக்காக வரும் எந்த ஒரு நோயாளியையும் முறையாகப் பரிசோதனை செய்து உரிய சிகிச்சை அளித்தனர். கற்றுக்கொடுக்கும் பணியில் மருத்துவர்கள் ஈடுபட்டதுடன் தங்கள் அறிவை மேம்படுத்திக் கொள்ள, காணொளி கருத்தரங்குகளிலும் (Webinars) பங்கேற்றனர்.

விடுதிகளில் தங்கியுள்ள செவிலியர்களுக்கு சமூக இடைவெளியின் அவசியம் புரியவைக்கப்பட்டது. அவற்றைப் பின்பற்றுகின்றனரா என்பதும் கவனமாகக் கண்காணிக்கப்படுகிறது. சத்தான உணவு வகைகள் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன. மருத்துவமனைக்குள் பணியாற்றும்போது பாதுகாப்பு சாதனங்கள் வழங்கப்படுகின்றன. குறையாத ஆர்வத்துடனும் பொறுப்புணர்வுடன் பணியாற்றவும் ஊக்கப்படுத்தப்பட்டனர். மேலாளர்களாகப் புதிதாகப் பொறுப்பேற்றுக் கொண்ட மூத்த செவிலியர்களும் தீவிரமாக செயலாற்றுகின்றனர்.

தங்களது பணிகளில் தெளிவு கொண்டு, பிறருடன் இணக்கமாக செயல்பட்டு உற்சாகமாக பணி செய்கின்றனர். ஊரடங்கு காலத்தில் நன்மைகளும் விளைந்துள்ளன. பிறரின் விருப்பம், திறமை, ஈடுபாடு ஆகியவற்றை அறிந்து, வியந்து பாராட்ட நேரம் கிடைக்கிறது. பிறரை அங்கீகரிப்பதில் லேசான தயக்கமும் பொறாமையும் நம்மிடம் முன்பு இருந்தது.

விடுதியில் தங்கியுள்ள செவிலியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டிய  தேவை இருந்தது. அவர்களுக்கு இடையே போதுமானஇடைவெளியைவழங்க வேண்டியிருந்தது. அரவிந்தின் அனைத்து கிளை விடுதிகளிலும் உள்ள 600 செவிலியர்களுக்கு அம்மை நோய்க்கான தடுப்பூசி போடப்பட்டது. மகத்தானபணியை இந்நேரத்தில் செய்து முடித்தோம்.

அவர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்பட்டன. நோய்த் தொற்றை அகற்றி தூய்மைப்படுத்தும் முறைகளும் முறையாகத் திட்டமிடப்பட்டன. விடுதிகளில் தங்கியுள்ள செவிலியர்களின் உடல்நலன் பற்றி பெற்றோர்கள் கவலைப்படக் கூடும் என்பதால் அவர்களுக்கு அவ்வபோது தகவல் தெரிவிக்கப்பட்டன.

தையல்கலை, யோகா, கேரம், செஸ் என தங்களுக்கு விருப்பமானவற்றில் செவிலியர்கள் ஈடுபட்டனர். இருக்கும் பொருட்களைக் கொண்டே அற்புதமான பொருட்களை தங்களது படைப்பாற்றலால் உருவாக்கினர். மருத்துவமனைப் பணிகள், உடற்பயிற்சிகள், பொழுதுபோக்கு, சுய மேம்பாடு என அனைத்திற்கும் நேரம் ஒதுக்கப்பட்டது.

செவிலியர்களுக்கான பயிற்சி, தடையின்றி தொடர்ந்ததுடன் திறன் மதிப்பீடும் செய்யப்பட்டது.

அன்பையும் கருணையையும் கொண்டு ஒழுக்கத்தைப் பராமரித்தால் சிறப்பானதாக இருக்கும். ஆனால் சிலருக்கு முழுசுதந்திரம் இருக்கும்போது அவை,விரைவாக சிதைந்துவிடும். ஒழுக்கத்தைக் கடைபிடிக்க அவர்கள் இன்னும் பக்குவப்பட வேண்டும்” – Dr.V

இல்லப் பராமரிப்புபணியாளர்கள், பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு ஏற்ப, மருத்துவமனையைத் தூய்மையாக வைத்துள்ளனர். துப்பரவு பணியாளர்கள், பலமணிநேரங்கள் இடைவிடாமல் உழைத்த வண்ணம் இருந்தனர்.

ஸ்டோர்ஸ் இன்ஸ்ட்ரூமென்ட்பிரிவு, பாதுகாப்பு கவசங்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்க, ஆரோலேப் உடன் இணைந்து செயலாற்றி, அரவிந்தின் அனைத்து கிளைகளுக்கும் விநியோகிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டது.

இந்த இக்கட்டான நேரத்தில்எந்த பின்னடைவுகளும்ஏ ற்படக்கூடாது என்பதற்காக சிவில் மற்றும் பராமரிப்புத்துறை முழு வீச்சில் செயல்பட்டது.

“நாம் செய்யும் பணியை யோகநிலை போல உணர வேண்டும். இது,கட்டிடங்கள், உபகரணங்கள், பணம், பொருள் பற்றியவை அல்ல. விழிப்புணர்வுடன் ஆன்ம உணர்வுடன் மேற்கொள்ள வேண்டியவை” – Dr.V

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்றின் தீவிரம் அதிகமாக இருந்த நிலையில் திண்டுக்கல்-அரவிந்த், தீவிர முன்னேற்பாடுகளை மேற்கொண்டு அவசர கண் சிகிச்சைகளை மேற்கொண்டது.

மேலூர் மற்றும் திருமங்கலம் சிட்டி சென்டர்கள், குறைவான பணியாளர்களுடன் செயல்பட்டு அப்பகுதிகளில் உள்ள மக்களின் தேவையைப் பூர்த்தி செய்தன.
விஷன் சென்டர் குழு, பாதுகாப்பு கவசங்களை விஷன் சென்டர் பணியாளர்களிடம் நேரில் ஒப்படைத்து, அவற்றைப் பயன்படுத்தும் விதம் பற்றி விளக்கமாக எடுத்துரைத்தது.  பரிசோதனை செய்ய, நோயாளிகளை அணுகும்போது சமூக இடைவேளை உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றனவா என்பதையும் உன்னிப்பாகக் கண்காணித்தது. சிகிச்சை, ஆலோசனை தேவைப்படுவோருக்கு காணொளி ஆலோசனை (e-consultation)மூலம் பயனடைந்தனர். காணொளி ஆலோசனைக்கு வழக்கமாகப் பரிசோதிக்கும் நோயாளிகளில் 50 சதவீத எண்ணிக்கையை முதல் வாரத்திலேயே விஷன் சென்டர்கள் பெற்றன. இதனால் நோயாளிகளுக்கு ஊரடங்கு காலத்தில் மருத்துவமனைக்கு வந்து செல்லும் செலவோ சிரமமோ ஏற்படவில்லை.

கொரோனா தொடர்பான தலைப்புகளில் காணொளி கருத்தரங்குகளை (webinars) நடத்துவதில் லைகோ (LAICO) முக்கிய பங்காற்றியது. தற்போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு அம்சங்களை முறைப்படுத்துதல், திருத்தப்பட்ட பதிப்புகளை மூத்த மேலாளர்களுடன் கலந்தாலோசித்து அரவிந்த் கிளைகள் முழுவதும் பரப்பும் பணிகளில் லைகோ நிர்வாகிகள் (LAICO Faculties)ஈடுபட்டனர்.  செவிலியர்களின் கணினி அறிவை மேம்படுத்தும் பணிகளில் ஒருங்கிணைப்பாளர்கள் ஈடுபட்டனர்.

“நமது செயல்களில் தன்னலம் குறைவாகவும் தாராள குணம் அதிகமாகவும் உள்ளபோது நமது தொழில்முறை வாழ்க்கையில் மனிதகுலத்திற்கு சேவை செய்யமுடியும்” – Dr.V
“நோயாளிகளை கண்ணியத்துடன் நடத்துவதும், கருணையுடன் சிகிச்சை அளிப்பதும் மனிதகுலத்திற்கு நாம் செய்யும் மாபெரும் சேவையே” – Dr.V

அனைத்து பணியாளர்களுக்கும் கண் நோய்கள், கண் நோய்களுக்கான எச்சரிக்கை, தற்காப்பு முறைகள் மற்றும் ‘அரவிந்தின் தூண்கள்’ பற்றிய பாடங்கள் நடத்தப்பட்டன.

தகவல் தொழில்நுட்பம், மிகவும் சக்தி வாய்ந்தது. அதை உரிய வகையில் பயன்படுத்தினால், நம் சமூகத்தின் வளர்ச்சி நிச்சயம் மேம்படும்.

மிகவும் பொறுமையாக,தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்த, தற்போது உள்ள நேரத்தைவிட சிறப்பான நேரம் அமையாது.

நோயாளிகளுக்கு முன்பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. பாதுகாப்பு அம்சங்களை முறையாகக் கடைபிடிக்கவும் இருக்கும் வளங்களைச் சிறப்பாகப் பயன்படுத்தவும் இம்முறை உதவிகரமாக உள்ளது. தேவையற்ற கூட்டமும் நீண்ட காத்திருப்பு நேரங்களும் இதன் மூலம் குறைவதால் நோயாளிகளின் திருப்தி பெருமளவில்அதிகரிக்கும்

ஊரடங்கு காரணமாக நோயாளிகளின் வரத்து குறைவாக உள்ளதால் இந்த முன்பதிவு முறையில் என்னென்ன சாதக-பாதக அம்சங்கள் ஏற்படுகின்றன என்பதை அறிய முடிகிறது. இதனால் வருங்காலங்களில் சில மாற்றங்களுடன் இதைத் தீவிரமாகத் தொடரும் எண்ணம் உள்ளது.

ஆய்வு செயல்பாடுகளைத் தொடர்ந்தும் ஆய்வறிக்கைகளை எழுதியும் ஆராய்ச்சி அறக்கட்டளையின் உறுப்பினர்கள், ஊரடங்கு காலத்தைப் பயனுள்ளதாக்கிக் கொண்டனர். மூத்த உறுப்பினர்கள், கொரோனா பற்றிய தகவல்களை தொடர்ந்து பகிர்ந்து கொண்டனர்.  அனைத்து நுகர்வோர்களுக்கும் ஏற்ற வகையில் தனது கொரோனா கால சிறப்பு தயாரிப்புகள், உள்ளதா என்பதைக் கண்டறிய ஆரோலேப், மருத்துவமனையைப் பரிசோதிக்கும் இடமாகப் பயன்படுத்திக் கொண்டது. இங்கு பயன்படுத்திப் பார்த்தவர்கள், தங்களது யோசனைகளைத் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் மாற்றங்களை ஆரோலேப் செய்தது.

“மக்களுக்கு உதவி தேவைப்படும் போதெல்லாம் உங்களால் உதவிட முடியாது, ‘உங்களுக்கு உதவுவேன். நீங்களும் உங்கள் பங்குக்கு முடிந்ததைச் செய்யவும்’ என அவர்களிடம் தெரிவிக்கவும்” – Dr.V

Click to view other newsletters